டாக்டர். அப்துல் கலாம் - ஒரு நினைவாஞ்சலி
மீனைப் பார்த்த பிள்ளை ஒன்று கொஞ்சம் வானைப் பார்த்தது !
அந்த நீந்தும் மீன்களைப் பிடித்து வானில் நீச்சல் விடத் துடித்தது!
அறிவுச் சிதறல்கள் கொண்ட பேப்பர்களை வீட்டு வாசல்களில் எறிந்து
அறிவுச்சுனையை உள்ளே வளர்த்தது !
அறிவுக்கும் வயத்துக்கும் உணவு கொடுத்த
ஆசானைத் தெய்வமாய் துதித்தது.!
ஒளியைத் தேடி அண்டத்தில் அலைந்தது
அதன் விஞ்ஞானம் !
ஒளியைத் தேடி உள்ளே அலைந்தது
அதன் மெய்ஞானம் !
நாட்டின் தலைமையில் நின்று அதன்
நாடியைப் பிடித்தது அவர் அறிவாற்றல் !
பறக்கும் விண்கலன் போல்
விரைந்து சென்றது அவர் செயலாற்றல்!
கடைசி மூச்சையும் கடமையில்
கரைத்தது அவர் நினைவாற்றல்!
மறைந்தும் மறையா மானுடர் வரிசையில்
மக்கள் தலைவராய் அப்துல் கலாம்!
No comments:
Post a Comment