Sunday, August 16, 2015

தனிமை (Loneliness)




தனிமை

உலகெல்லாம் உனக்குத் தேவை,
உலகுக்கோ நீ தேவையில்லை
தாமரையிலைத் தண்ணீருக்குத்
தாக சாந்தி நித்தம் எதற்கு?

பூவுக்கு வாசம் சொந்தமோ?
பூக்காத மலரை உலகம் நாடுமோ?
வந்து போகின்ற உறவுகள் வாசத்தில்
வாழ்ந்து விட்டால் வழக்கெதற்கு ?

தாயாகச் சுமந்து தவித்தாலும்
தொப்புள்கொடி தனியாகவேண்டும் !
தென்றலாக வாழ்க்கை இருந்தாலும்
தனிமையாகத் தானே செல்லவேண்டும்?

தனிமையென்றும்  வாட்டமில்லை
தனிமையென்றும் வீழ்ச்சியில்லை !
தன்னையறிந்த மாந்தருக்குத்

தாகம் என்றும் இருப்பதில்லை !

No comments:

Post a Comment