உலக நட்பு தினம்
நட்புக்கு ஓர் நாள் !?
நெருப்புக்குச் சூடு நட்பு
நீருக்குக் குளிர் நட்பு
காற்றுக்கு வேகம் நட்பு
மலருக்கு வாசம் நட்பு
பூமிக்குப் பொறுமை நட்பு
பொன்னுக்கு நிறம் நட்பு
போருக்கு வலிமை நட்பு
பெண்ணுக்குத் தாய்மை நட்பு
வானுக்கு நிலவு நட்பு
வறுமைக்குப் பசி நட்பு
வாதத்திற்கு கோபம் நட்பு'
விருந்துக்கு அன்பு நட்பு
மழலைக்கு வெகுளி நட்பு
இளமைக்கு காமம் நட்பு
முதுமைக்கு அறிவு நட்பு
முடிவுக்கு முக்தி நட்பு
சொல்லுக்கு அடக்கம் நட்பு
சோகத்திற்கு அமைதி நட்பு
சுமைக்கு வியர்வை நட்பு
சொந்தத்திற்கு உரிமை நட்பு
நட்பில்லா உயிருண்டோ உலகினில் !
நட்பின்றி நாளென்றும் விடிந்திடுமோ?
நட்புக்கு ஒரு நாளை நாம் அழைத்தால்
நாட்கள் பலவும் சிறைப்பட்டு அடையாதோ?
வாழ்க நித்தம் நட்புடன்!!
க.பாலசுப்ரமணியன்
நட்புக்கு ஓர் நாள் !?
நெருப்புக்குச் சூடு நட்பு
நீருக்குக் குளிர் நட்பு
காற்றுக்கு வேகம் நட்பு
மலருக்கு வாசம் நட்பு
பூமிக்குப் பொறுமை நட்பு
பொன்னுக்கு நிறம் நட்பு
போருக்கு வலிமை நட்பு
பெண்ணுக்குத் தாய்மை நட்பு
வானுக்கு நிலவு நட்பு
வறுமைக்குப் பசி நட்பு
வாதத்திற்கு கோபம் நட்பு'
விருந்துக்கு அன்பு நட்பு
மழலைக்கு வெகுளி நட்பு
இளமைக்கு காமம் நட்பு
முதுமைக்கு அறிவு நட்பு
முடிவுக்கு முக்தி நட்பு
சொல்லுக்கு அடக்கம் நட்பு
சோகத்திற்கு அமைதி நட்பு
சுமைக்கு வியர்வை நட்பு
சொந்தத்திற்கு உரிமை நட்பு
நட்பில்லா உயிருண்டோ உலகினில் !
நட்பின்றி நாளென்றும் விடிந்திடுமோ?
நட்புக்கு ஒரு நாளை நாம் அழைத்தால்
நாட்கள் பலவும் சிறைப்பட்டு அடையாதோ?
வாழ்க நித்தம் நட்புடன்!!
க.பாலசுப்ரமணியன்
No comments:
Post a Comment