Sunday, July 26, 2015

ஷியாமளி

சிறுகதை------- .  பாலசுப்ரமணியன்

தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம்.. கேன்டீன்  வேலையாளர்கள் சாப்பாட்டுச் சாமான்களை ஏற்றுவதில் துரிதம் காட்டிக்கொண்டிருந்தனர். " கொஞ்சம் தள்ளுங்கப்பா,.... மேலே ஏற விடுங்க" அவர்களை கைகளால் விலக்கிக்கொண்டே ரகுநாதன் தன் மனைவியுடனும் மூட்டை முடிச்சுக்களுடனும் உள்ளே செல்ல முயற்சித்துக்கொண்டிருந்தார்,.

தன் இடத்தை கண்டுபிடித்து அமர்ந்தவுடன் அவர் முகத்தில் ஒரு வெற்றிப்புன்னகை வெளிப்பட்டது. " நல்லவேளை. நம்ம ரெண்டு பேருக்கும் எதிர்த்தாப்புலே அதுவும் லோயர் சீட்."

அந்த சி மெக்கானிகைப் பார்த்து "ஏன் தம்பி. சியை போட்டுட்டே? ரொம்ப  ஹாட்டா இருக்கு."  ஒரு அட்வைஸ் கொடுத்தார்

தன்னுடைய இருக்கையில் அமர்ந்த ரகுநாத்தின் கண்கள் இங்கும் அங்கும் உலாவிக்கொண்டிருந்தன. அவர் மனைவி லீலாவதி அவர் பார்வையின் நடப்புக்களுக்கு பொருள் தேடிக்கொண்டிருந்தாள்.

திடீரென்று அவர் பார்வை எதிர் சைடு சீட்டில் இருந்த பெண்ணிடம் தாவியது. கொஞ்சம் உற்று நோக்கிக்கொண்டிருந்தார். "ஏன்னா, என்ன அங்கேயே பார்துக்கொண்டிருக்கேள்? யாரவது பார்த்தா தப்பா நினைக்கப் போரா. அதுவும் இப்ப எங்க எங்க வீடியோ கேமரா வச்சிருக்கான்னு தெரியாது என்று சிரித்துக்கொண்டே கமெண்ட் அடித்தார்.

தலையைக் கீழே கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட அவரை ஒரு குரல் தன் பக்கம் ஈர்த்தது. " சார், நீங்க ரகுநாதன் சார் தானே? "

தன் தலையை உயர்த்தியவாறே " நீ ஷியாமளிதானே?"

"எப்படி சார், இவ்வளவு கரெக்டா கண்டுபிடுச்சேள்? இருபது வருஷத்துக்கு மேல ஆச்சு." அவள் பேச்சில் மலையாள மொழியின் வாடை வீசிக்கொண்டிருந்தது.

"மறக்க முடியுமா.. அந்த நாராயணீயத்தை? " அவர் கண்கள் பனித்தன. ஷியாமளி தன் கைக்குட்டையால் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டாள்,

" இவ ஷ்யாமளி. உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் ஸ்டுடென்ட். இருபத்தி மூணு வருஷம் முன்னாடி.."


"ஸ்ரீதேவி எப்படி இருக்கா?"

"சார். அக்கா பேருகூட ஞாபகம் இருக்கு உங்களுக்கு.. அவ துபாயில இருக்கா. கல்யாணம் ஆயிடுத்து. ரெண்டு குழந்தைகள். அவ புருஷன் அங்க  அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாங்க்ல வேலை பார்க்கறார். இவளும் ஒரு பிரைவேட் கம்பெனியிலே வேலை பார்க்கிறாள்."

" வாட் அபௌட் யு?"  ரகுநாதன் கேள்வி தொடர்ந்தது .

ஷியாமளி சிரித்துக்கொண்டே. " ஞாபகம் இல்லையா சார்? கடைசி நாள் உங்களை விட்டு போகும்போது என்ன சொன்னேன்னு?"

ரகுநாதன் சற்றே யோசித்தார். " உங்களை மாதிரி ஒருவர் கிடைத்தால்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. இன்னும் கிடைக்கலை." இருவரும் வாய் விட்டுச் சிரித்தனர். லீலாவதியின் முகம் ஏதோ ஒரு மாதிரியாக மாறியது.


இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு.. ..

ரகுநாதன் பெங்களூரில் உள்ள ஒரு மத்திய பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். அப்பொழுது அவருக்கு திருமணமாகவில்லை. எல்லா மாணவர்களுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். யாரும் அவருடைய வகுப்பைத் தவற விடுவதில்லை.

அன்று.. அவர் வகுப்புக்குள் நுழையும் பொது ஒரே சத்தம்.

"ஏன் இவ்வளவு சத்தம்? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரகுநாதன். மாணவர்கள் அவரவர் இடங்களில் சென்று அமர்ந்தனர். முன் வரிசையில் அமர்ந்திருந்த ஜெயஸ்ரீ மட்டும் தன் லேப் ரெகார்ட் நோட்புக்கில் எழுதிக்கொண்டிருந்தாள்.

அவளை கவனித்த ரகுநாதன் "என்ன ஜெயஸ்ரீ உனக்கு மட்டும் இன்னும் சயின்ஸ் பீரியடு முடியலையாக்கும்" என ஒரு அதட்டலுடன் கேட்டார்.

"சாரி சார்." என்று சொல்லிக்கொண்டே ஜெயஸ்ரீ தன் நோட்புக்கை மடித்து உள்ளே வைத்தாள். அவளுடைய டேபிள் மேலே ஒரு அழகிய பேனா வைக்கக்கூடிய சிறிய உறையைக் கண்ட அவர்  "நல்லாயிருக்கே. எங்கே வாங்கினாய்?" என்று கேட்டார்.

" சார், எங்க அப்பா என் பிறந்தநாளுக்குப் பரிசாக கொடுத்தது. " என்று ஒரு புன்முறுவலுடன் பதிலளித்தாள்சற்றே நகர்ந்த ரகுநாதன் அவளுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த ஷியாமளியிடம் " ஷியாமளி, உங்கப்பா உன் பிறந்தநாளுக்கு என்ன கொடுத்தார்?" என்று அனாயாசமாக ஒரு கேள்வி கேட்டார்.

எழுந்து நின்ற ஷியாமளி பதில் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள். "
"உன்னைத்தானே கேட்கிறேன்" என்று அவர் சற்றே உரத்த குரலில் கேட்க அருகிலிருந்த ஜெயஸ்ரீ எழுந்து நின்று. "சாரி சார், அவளுக்கு அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லை. அவள் அவ மாமா வீட்டிலே தங்கியிருக்கிறாள்."

ஷ்யாமளியின் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. தன் தவறை உணர்ந்து வெட்கமடைந்த ரகுநாதன் " சாரிம்மா. அம் ரியல்லி சாரி. நான் அப்படி கேட்டிருக்கக்கூடாது ." அவருக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அமைதியாக கரும்பலகையை நோக்கி நடந்தார்..

அன்று முதல் ஷ்யாமளியிடம் ஒரு தாய்ப்பாசம் அவருக்கு, ஷியாமளி ஒரு அடக்கமான பெண். யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டாள். அவளுண்டு அவள் வேலையுண்டு. எந்த விதமான போட்டிகளிலும் கலந்து கொள்ள மாட்டாள். எல்லோருக்கும் தெரியும் அவள் ஒரு தனிப்பறவைஎன்று.

அந்த பள்ளியின் ஆண்டு விழாவையொட்டி பலவிதமான போட்டிகளுக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன. பள்ளி மாணவர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டிருந்தனர். தாகூர் அணிக்கு ரகுநாதன் தான் காப்பாளர். மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை பங்கேற்கச்செயவது அவர் கடமை.

"ஷியாமளி, நீ எதிலே பங்கேற்றுக்கொள்ளப்போகிறாய்? " என்று அவர் அன்று வகுப்பறையில் கேட்டார்.

 "ஐயோ, நானா சார். எனக்கு எதுவுமே வராது."

"எதுவுமே வராதுன்ன, அது எப்படி? உங்கிட்ட என்ன திறமையிருக்கோ அதுல பங்கேடுத்துக்கோ."

அவள் முற்றிலும் மறுத்தாள்.

" டான்ஸ்?" 

"நோ சார்."

 பேச்சுபோட்டி?"

 : "நோ சார்"

" அப்படின்னா, பாட்டுப போட்டில ".

 " எனக்கு பாட்டு வராது சார்"




" இல்லே, நீ பாட்டு போட்டிலே நிச்சயமா பங்கு எடுத்துக்கணும். இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு. ப்ராக்டிஸ் பண்ணிக்கோ."

 செய்வதென்று தெரியவில்லை. ஒரு வாரம் ஓடிவிட்டது. அன்று பாட்டுப்போட்டி. அந்த அரங்கத்தில் மாணவர்கள் நிரம்பி இருந்தனர். உட்கார இடமின்றி பின்னே பலரும் நின்று கொண்டிருந்தனர்.

" அப்படின்னா, பாட்டுப போட்டில ". " எனக்கு பாட்டு வராது சார்"

" இல்லே, நீ பாட்டு போட்டிலே நிச்சயமா பங்கு எடுத்துக்கணும். இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு. ப்ராக்டிஸ் பண்ணிக்கோ."

ஷ்யமளிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு வாரம் ஓடிவிட்டது. அன்று பாட்டுப்போட்டி. அந்த அரங்கத்தில் மாணவர்கள் நிரம்பி இருந்தனர். உட்கார இடமின்றி பின்னே பலரும் நின்று கொண்டிருந்தனர்.   


" அக்ரே பஷ்யாமி...." என்று அவள் குருவாயூரப்பனின் நாரயணீயம் பாட்டுத் 
 தொகுப்புலிருந்து கணீரென்ற குரலில் ஆரம்பிக்க ஓரிரு வினாடிகள் அவளையே பார்த்திருந்த மாணவர் கூட்டம் கை தட்ட ஆரம்பித்தது. அவள் கண்களைத் திறக்கவில்லை. சில வினாடிகளில் அவள் கண்ணிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது. மீண்டும் கரகோஷம். கணீரென்று அவள் பாடியதைக் கேட்க அந்த குருவாயூரப்பனே அங்கே வந்தது போன்ற ஒரு பிரமை. அவளுடைய பாட்டின் நிறைவில் அந்த அரங்கத்திலிருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்ட ஷியாமளி தன கண்களைத் துடைத்தவாறே கிழே இறங்கினாள். அவள் ஓரக்கண் பார்வை மட்டும் ரகுநாதனின் மேல் விழுந்தது.

முதல் பரிசு ஷ்யாமளிக்குத்தான்!

அன்று மாலை ரகுநாதனை அவர் அறையில் சந்தித்த ஷியாமளி " சார், நான் பாடின பொது அங்கே குருவாயூரப்பன் இல்லை சார். நீங்கள் தான் நின்று கொண்டிருந்தீங்க.... தெய்வம் மாதிரி.. அதுனால தான் என் கண்களிருந்து நீர் வந்தது..."

ரகுநாதனின் தொண்டை அடைத்தது. அவரால் பேச முடியவில்லை. அடுத்த ஆண்டு தனது பத்தாம் வகுப்பை முடித்த ஷியாமளி, ரகுநாதனிடம் ஆடோக்ராப் வாங்க வந்தாள்.

"என்னம்மா?"

"சார். நான் எங்க மாமாவோட எர்ணாகுளம் போறேன்...சார்.. உங்களை நான் எப்படி மறப்பேன்?" அவள் கண்களில் நீர் வழிந்தது.

" ஷியாமளி. கண்டிப்பா என்னிக்காவது எங்கேயாவது நம்ம சிந்திப்போம். அப்போ நீ பெரியவளாகி  நல்லா  படித்து நல்ல வேலையிலே இருக்கணும். சொந்தக்காலிலே நீ நிற்கணும். கல்யாணம் பண்ணி உன்னை உன் குழந்தைகளோட நான் பார்க்கணும்.. தென் ஒன்லி வில் பி ஹாப்பி." ரகுநாதனின் குரல் தழுதழுத்தது.

"சார்,.கல்யாணம் பண்ணிக்கணும்னா உங்களை மாதிரி ஒரு நல்லவர் கிடைத்தால் தான் சார் பண்ணிப்பேன்:" சொல்லிக்கொண்டே அவள் சிரித்தாள்.  ரகுநாதனும் வாய் விட்டுச்  சிரித்தார்.!!

ராஜதானி எக்ஸ்பிரஸ் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

"சார், கொஞ்சம் லைட்டை அணைக்கிரீர்களா ....நேரமாச்சு.." என ரயில் அட்டென்டன்ட் அவர்களைப் பார்த்துச் சொன்னான்.

" ஷியாமளி, இறங்கறதுக்கு முன்னாடி ஒரே ஒரு தரம் அந்த "அக்ரே பஷ்யாமி..." என்று கேட்டுக்கொண்டே தன் படுக்கையை விரிக்க எழுந்தார்..


No comments:

Post a Comment